மக்களை திசை திருப்பும் முயற்சியில் பா.ஜ.க. தொடர்ந்து ஈடுபடுகிறது... செல்வப் பெருந்தகை கண்டனம்!

தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசு இந்தி மொழியையே திணிக்க பார்க்கிறது என தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் 90 நாட்கள் நடைபெறவுள்ள கையெழுத்து இயக்கத்தை நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
இன்று (06.03.2025) சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் காவல்துறை அனுமதியின்றி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் மிகுந்த சிரமத்தை கொடுத்து வருகின்றனர்.…
— Selvaperunthagai K (@SPK_TNCC) March 6, 2025
இதனையடுத்து இன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினார். இதற்கு உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி போலீசார் தமிழிசையை கைது செய்துள்ளனர். அப்பகுதி போலீசார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து பொதுமக்களுக்கு இடையூறாக கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள் என அதனை தடுத்தனர். தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்துவோம் என தமிழிசை கூறியதால் அவரை தடுப்பு காவலின் கீழ் கைது செய்ததாக தகவல்கள் வெளியானது.
அனுமதி இல்லாமல் இந்த இயக்கத்தை நடத்தியதாக தமிழிசை சௌந்தரராஜனுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தனது எக்ஸ் வளைத்தள பக்கத்தில் கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “இன்று (06.03.2025) சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் காவல்துறை அனுமதியின்றி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் மிகுந்த சிரமத்தை கொடுத்து வருகின்றனர்.
ஜனநாயக நாட்டில் அரசு அனுமதியுடன் இயக்கம், கூட்டங்கள், பேரணிகள் நடத்த முடியும். இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்த திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் சட்டத்தை மதிக்காமல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்யலாமா?
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் இதுபோன்ற தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர். நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை பொறுத்துக் கொள்ளமுடியாமல், திசைதிருப்பும் ஒரு நிகழ்ச்சியாக இதுபோன்ற செயல்களில் பா.ஜ.க. வினர் ஈடுபடுகின்றனர். இவர்களின் செயலுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என காட்டத்துடன் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!