ஒன்றரை ஆண்டுகளாக 250 பேர் படுகொலை செய்யப்பட்ட மாநிலத்தை ஆண்டது பாஜக... அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்.!

 
அமித்ஷா  ஸ்டாலின்

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி என்பது ஏற்கனவே  தோல்வியை சந்தித்த கூட்டணி. தொடர் தோல்வியை சந்தித்த போதிலும் அமித்ஷா  இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் என தமிழக முதல்வர்  ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமித்ஷா  ஸ்டாலின்
நேற்றைய தினம் பாஜக தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்று அமித்ஷா பேசியிருந்தார். இதற்கு’ இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்’ ஒன்றரை ஆண்டுகளாக 250 பேர் படுகொலை செய்யப்பட்ட மாநிலத்தை ஆண்டது பாஜக என கடுமையாக விமர்சித்திருந்தார்.  இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட், மும்மொழிக்கொள்கை, வக்பு திருத்த சட்டம், தொகுதி மறுவரையறை போன்றவை அதிமுக – பாஜக கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா? உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் ஓர் அமைச்சர், ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என வாய்க்கு வந்தபடி பேசி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

அமித்ஷா  ஸ்டாலின்
இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு தான் என்பதை உள்துறை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். மத்திய புலனாய்வு அமைப்புகள் 2 சோதனைகள் நடத்தியதையும், அதில் இருந்து தப்பித்துக் கொள்ள பாஜக தலைமையை நோக்கி அதிமுக ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்து கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள்
2 ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடித்துக் கொண்டுள்ளனர்.  பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கின்றனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web