கதறித் துடித்த பெற்றோர்... காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி!

சென்னையில் ஆவடி, ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவில் வசித்து வருபவர் 40 வயது ராஜ்குமார். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி எமிலியம்மாள் . இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இதில் அவரது மகன் 10 வயது கார்த்திக் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வந்தான். கார்த்திக், நேற்று பிற்பகலில் தாய் எமிலியம்மாள் உடன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றான். எமிலியம்மாள் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க, கார்த்திக் 2 வது மாடியில் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது, காற்றாடி மரத்தில் சிக்கி விட்டது. இதனை எடுக்க முயற்சித்தபோது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளான். எமிலியம்மாள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தான் இதனையடுத்து போலீசார், கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!