குடிநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி.. விளையாடிய போது நேர்ந்த துயரம்!

 
குடிநீர் தொட்டி சிறுவன்

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, தவறுதலாக குடிநீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன், புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (41). கார் ஓட்டுநரான மணிகண்டனின் மனைவி ஷீலா (34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஜஷ்வந்த் (6) அதே பகுதியில் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1ம் வகுப்பு முடித்துள்ளான். 

தற்போது கோடை விடுமுறை என்பதால், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமானான். சிறுவனைக் காணவில்லை என பெற்றோர்கள், பல இடங்களில் தேடி வந்தனர். அக்கம் பக்கத்திலும், தீவிர தேடுதலிலும் சிறுவன் கிடைக்காததால், யாரோ தங்களது மகனைக் கடத்தி சென்று விட்டதாக கூறி மணிகண்டன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

boy-dead-body

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் மணிகண்டனின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுவனைத் தேடும் பணியையும் முடுக்கி விட்டனர். சிறுவனைத் தேடும் முயற்சியில் போலீசார் இருந்த போது, மணிகண்டனின் வீட்டின் அருகே உறவினர் ஒருவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் தரை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டியில் சிறுவன் ஜஸ்வந்த் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவனது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுவன் ஜஷ்வந்த் விளையாடும் போது தண்ணீர் தொட்டியின் மேலே போடப்பட்டிருந்த மரப்பலகை உடைந்து உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. 

Villianur PS

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web