பைக் ஓட்டி வந்த சிறுவன்... பெற்றோர் மீது வழக்குப்பதிவு... ரூ.25,000 அபராதம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து ரூ.25ஆயிரம் அபராதம் விதித்து, சிறுவனின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தலைமையில் போக்குவரத்து பிரிவு போலீசார் நேற்றுதென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலசண்முகபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்துள்ளார்.

இதனையடுத்து மேற்படி சிறுவனின் இருசக்கர வாகனத்தை போக்குவரத்து பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தை மீறி சிறுவனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்த சிறுவனின் தந்தை மீது மேற்படி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ரூ.25,000 அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
