பகீர்.. கடத்திக் கொன்று.. பிணத்துடன் உடலுறவு! போலீசில் சிக்கிய 16 வயது சிறுவன்!

 
வன்கொடுமை

பெண்ணை பழிவாங்க பாலியல் வன்கொடுமை செய்து மர்ம உறுப்பை சிதைத்து கொடூரமாக கொலை செய்த சிறுவனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தின் ஹனுமானா பகுதியில் வசிக்கும் 58 வயது பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்  மர்மான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த பெண்ணின் கணவரும் மகனும் மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. பெண் கொலையால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர். 

காவல்துறை

பின்னர், பெண்ணின் கணவர், மகன் ஊருக்கு வந்து அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இந்த பெண்ணின் வீட்டிற்கு பக்கத்தில் 14 வயது சிறுவன் வசித்து வந்தான். அவன் பெண்ணின் வீட்டில் இருந்த செல்போனை திருடியதாகவும், அதை கண்டுபிடித்து விட்ட அப்பெண்ணும் குடும்பத்தாரும் அவனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இது அந்த சிறுவனை ஆத்திரப்படுத்திய நிலையில், அன்று தொடங்கி பெண்ணை பழிவாங்கப் போகிறேன் என சிறுவன் தொடர்ந்து கூறி மிரட்டி வந்துள்ளான்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்க்கும் விதமாக பெண்ணை கொன்று கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. பெண்ணின் கணவரும், மகனும் வீட்டில் இல்லை என்பதை அறிந்து கொண்ட சிறுவன், ஜனவரி 30ம் தேதி இரவு வீட்டிற்குள் நுழைந்துள்ளான். பெண் அப்போது தூங்கிக் கொண்டிருந்துள்ளார். பெண்ணை பிடித்து அவரது கை கால்களை கட்டிப்போட்ட சிறுவன், கூச்சலிட்டும் சத்தம் வெளியே கேட்கக் கூடாது என வாயையும் பாலித்தீன் துணிகளை வைத்து அடைத்துள்ளான்.

சிறுவன்

பின்னர் தாக்கி விட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான். மேலும், பெண்ணின் அந்தரங்க உறுப்பை ஆயுதங்கள் மூலம் சிதைத்துள்ளான். பெண்ணிடம் இருந்த நகைகளை திருடி தப்பியோடி தலைமறைவாக இருந்த அந்த 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web