காவல்நிலைய வாசலில் திடீரென காதலிக்கு தாலி கட்டிய காதலன்!!

 
அர்ஜுன்

காதலுக்கு மரியாதை, காணாமலே காதல் என்ற காலம் மலையேறி விட்டது. தனக்கு பிடித்ததை சாதித்துக் கொள்ள வேண்டும். என்ன தடை வந்தாலும், யார் என்ன சொன்னாலும் கவலையில்லை என்பதை நோக்கி இளைய தலைமுறை அலட்சியமாக நடந்து வருகிறது. அதிலும் பெண்ணின் பெற்றோர்கள் பாடு மிகத் திண்டாட்டம் தான். திருச்சி ஏர்போர்ட் பகுதியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் அர்ஜுன். கே.கே.நகர் அடுத்துள்ள உடையான்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  சிவரஞ்சனி. இவர் தற்போது ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

அர்ஜுன்
இவர்கள் இருவரும் கடந்த  3 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவீட்டிலும் தெரியவரவே குடும்ப சண்டை ஏற்பட்டது. உடனடியாக இரு குடும்பத்தினரும் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  மற்றொரு வழக்கில் பிசியாக இருந்ததால்  அந்த குடும்பத்தினரை வெளியே நிற்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர். 
இந்நிலையில் வெளியே சென்ற அந்த இரு குடும்பத்தினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த  அர்ஜுன் திடீரென சிவரஞ்சனியின் கழுத்தில் மஞ்சள் கயிற்றை எடுத்து கட்டிவிட்டார். பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் கூச்சலிட்டு ஐயையோ தாலி கட்டி விட்டானே என  சத்தமிட்டனர். அர்ஜுன் சிவரஞ்சனியை அழைத்துக்கொண்டு வேகமாக காவல் நிலையத்திற்கு உள்ளே சென்று விட்டார். 

போலீஸ்


பின்னர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இரு குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட போது பெண் வீட்டார் எங்களுக்கு பெண் தேவை இல்லை என கூறிவிட்டனர். இரு தரப்பினரும் எழுதிக் கொடுத்துவிட்டு செல்ல காவல்துறை அறிவுறுத்தினர். இதனையடுத்து பெண் வீட்டார் இனி எங்களுக்கும் பெண்ணிற்கும் சம்பந்தமில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விட்டனர். மேலும் அர்ஜுன் குடும்பத்தினர் நாங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு செல்கிறோம் என கூறியதால் கூச்சல் குறைந்தது.  காவல்துறையினர் அவர்களிடம் எழுதி வாங்கிவிட்டு பெண்ணை அவரோடு அனுப்பி வைத்தனர். காவல் நிலைய வாசலில் திடீரென தாலி கட்டியதால் சிறிது நேரம் அதே இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web