வாழ்த்துகள்.... விளையாட்டு மைதானத்தில் கண்டெடுத்த பணத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவர்கள்!

 
கடையம்


தென்காசி மாவட்டம் கடையத்தில் விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் விளையாட்டு மைதானத்தில் கண்டெடுத்த ரூ.100ஐ காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.  கடையம் கருப்பசாமி கோயில் தெருவில் வசித்து வரும்  தர்மர் மகன் அபிமன்யு மற்றும் கருப்பசாமி மகன் பாலாஜி ஆகியோர் நேற்று விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

கடையம்

அப்போது ரூ.100 மைதானத்தில் கிடந்துள்ளது. இதையடுத்து அபிமன்யு மற்றும் பாலாஜி ஆகியோர் கடையம் காவல் நிலையத்திற்குச் சென்று இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்துள்ளனர். இருவரையும் பாராட்டிய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் இருவருக்கும் தலா ரூ.100 அன்பளிப்பாக வழங்கினார்.  

போலீஸ்
இதுகுறித்து சிறுவர்கள்  ‘வியாழக்கிழமை பள்ளியில் உரையாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் உமா பொது இடங்களில் கண்டெடுக்கும் பொருட்கள் மற்றும் பணத்தை உடனடியாக காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படியே  விளையாட்டு மைதானத்தில் கண்டெடுத்த ரூ.100ஐ காவல்நிலையத்தில் ஒப்படைத்தோம்’ எனக் கூறினர். இச்சம்பவத்திற்கு சிறுவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது