சினிமாவை மிஞ்சும் விறுவிறுப்பு!! இந்திய கிரிக்கெட் வீரரின் நெகிழ்ச்சி காதல் கதை.!!

 
பாத்திமா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர். 90'களில் பலரும் இவருக்கு ரசிகராக இருப்பர். தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை பதறவைத்து இந்திய அணியில் தனக்கு என்று தனி இடம் பிடித்தனர். தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும் இன்றும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அவர் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.

அஜித் அகர்கர் 1998ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அந்த தொடரில் ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட்டை முதல் முதலாக வீழ்த்தி அசத்தினார். அஜித் அகர்கர் இந்தியாவுக்காக 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 58 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 288 விக்கெட்டுகளையும், 20 ஓவர் போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

பாத்திமா

டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்சில் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த ஆட்டமாகும். அதேநேரம், 42 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டமாகும்.இந்தியா கோப்பைகளை வென்ற பல முக்கிய போட்டிகளில் அணியில் இடம்பிடித்திருந்தார். 1999, 2003 மற்றும் 2007 கிரிக்கெட் உலகக் கோப்பைகளிலும், 2007 ஐசிசி உலக இருபது20 உலகக் கோப்பை வென்ற அணியிலும் அஜித் அகர்கர் இடம்பிடித்தார்.  

இப்படி கிரிக்கெட்டில் கலக்கிய அதேகாலக்கட்டத்தில் தான் தனது காதலையும் வளர்த்துள்ளார் அஜித் அகர்கர். ஒரு சினிமா கதை போன்று அஜித் அகர்கர் தனது திருமணத்தை கூறியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதாவது, அஜித் அகர்கர் ஒரு மராத்தி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததுதான் சில சிரமங்களை இவருக்கு கொடுத்தது. 

பாத்திமா

அஜித் அகர்கர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டது தன்னுடைய நண்பர் மஜாரின் சகோதரி ஆவார். ஒருநாள் விளையாடும் போது, போட்டியை சகோதரருடன் பார்க்க வரும்போது இருவரும் சந்தித்தனர். அஜித் 1999 ஆம் ஆண்டு பாத்திமா காடியல்லியை சந்தித்தார். அஜித்துக்கும் பாத்திமாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் மெல்ல மெல்ல காதலாக மாறியது.

இறுதியாக போராடி பாத்திமாவை அஜித் திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் எதிர்ப்பு இருந்தாலும் பின்னர் அனைத்தையும்  சமாளித்து 2002 பிப்ரவரி 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்டதால் அனைத்து பிரச்சனைகளும் தீரவில்லை ஆனால் திருமணத்திற்கு பிறகும் பல விமர்சனங்களை சந்திக்க வேண்டி வந்தது. அஜித் அகர்கர் - பாத்திமா தம்பதிக்கு ராஜ் என்ற மகன் உள்ளான். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web