முதலிரவில் தாம்பத்யத்திற்கு மறுத்த புதுமணப்பெண்... கணவன் செய்த கொடூரம்... அதிர்ச்சி வாக்குமூலம்!

 
கள்ளக்காதலன் இளம்பெண் கொலை முதலிரவு உல்லாசம்

திருமணம் முடிந்த முதலிரவன்று, தாம்பத்திய உறவுக்கு மறுத்த புதுமணப் பெண்ணைச் சுத்தியலால் சரமாரியாகத் தாக்கி, அறையில் பூட்டிவிட்டுச் சென்ற கணவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண், கணவரின் முந்தைய ரகசிய உறவுகள் குறித்த அதிர்ச்சித் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் ஜோஸ்வா (வயது 33). இவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் திருமணத் தகவல் மையம் மூலம் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆசை கனவுகளுடன் புதுப்பெண் கணவர் வீட்டிற்கு வந்தடைந்தார்.

திருமணம் முடிந்த மறுநாள், நவம்பர் 24 ஆம் தேதி முதலிரவு நடந்தது. அறைக்குள் நுழைந்த புதுமாப்பிள்ளை அகஸ்டின் ஜோஸ்வா உடனடியாகத் தாம்பத்திய உறவைத் தொடங்கத் துடித்ததாகத் தெரிகிறது. ஆனால், புதுப்பெண் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

உல்லாசம்

"முதல் இரண்டு நாட்கள் இருவரும் மனம் விட்டுப் பேசுவோம். அதன்பிறகு உறவைத் தொடங்கலாம்" என்று புதுப்பெண் தெரிவித்திருக்கிறார். ஆனால், அகஸ்டின் ஜோஸ்வா அதற்குச் சம்மதிக்கவில்லை என்றும், உடனடியாக உறவைத் தொடங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

புதுப்பெண் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், ஆத்திரம் அடைந்த அகஸ்டின் ஜோஸ்வா, அறையில் இருந்த சுத்தியலை எடுத்துப் புதுப்பெண்ணைச் சரமாரியாகத் தாக்கினார். இதில் கைகள், கால்கள் மற்றும் நெற்றியிலும் அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

முதலிரவு அறையில் புதுப்பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில், அகஸ்டின் ஜோஸ்வா அவரை அறைக்குள் போட்டு வெளியில் பூட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். மயக்கமடைந்த புதுப்பெண், இரவு முழுவதும் முதலிரவு அறையிலேயே சிறைவைக்கப்பட்டதைப்போல கிடந்துள்ளார். மறுநாள் காலையில், சந்தேகமடைந்த உறவினர்கள் முதலிரவு அறையைத் திறந்து பார்த்து, அதிர்ச்சியடைந்து பெண்ணை மீட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

உல்லாசம் சொகுசு ஹோட்டல் பாலியல் பலாத்காரம் இன்ஸ்டாகிராம் பாலியல் பலாத்காரம் இளம்பெண் கல்லூரி மாணவி

இந்தச் சம்பவம் குறித்துக் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுமாப்பிள்ளை அகஸ்டின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நேற்று புதுப்பெண் மீது தாக்குதல் நடத்திய சுத்தியலோடு அகஸ்டின் ஜோஸ்வா வேப்பேரி காவல் நிலையத்தில் சரணடைய வந்தபோது, அவரைக் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுப்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

"திருமணத்தின் போது அகஸ்டின் ஜோஸ்வா தன்னைப் பெரிய வசதி படைத்தவன் என்று கூறினார். நகைகள் எதுவும் வேண்டாம் என்று வரதட்சணை மறுத்தார். நானும் அவர் நல்ல கணவராக இருப்பார் என்று நம்பி கழுத்தை நீட்டினேன். தாலிகட்டி அவர் வீட்டிற்கு வந்தவுடன் தான், அவர் ஏற்கனவே இரண்டு பெண்களோடு தொடர்பில் இருந்தது தெரியவந்தது. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணிடமும் அவருக்கு ரகசிய உறவு இருந்ததாக உறவினர்கள் கூறினார்கள். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அவருடன் நல்லபடியாக வாழவே நினைத்தேன். அவர் என்னுடன் மனம் விட்டுப் பேசாமல், என்னோடு உறவு வைப்பதிலேயே குறியாக இருந்தார். அது எனக்குப் பிடிக்கவில்லை. எதிர்பாராத விதமாக என் மீது தாக்குதல் நடத்தினார். நல்லவேளையாக நான் உயிர் பிழைத்தேன். இனிமேல் அவரோடு வாழ முடியாது" என்று அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாகப் போலீசார் கூறினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!