பிறந்து 9 நாட்களே ஆன குழந்தை... மூச்சைப் பிடித்து தாயே கொன்ற கொடூரம்!

 
சகுந்தலா

தொழில்நுப்ட வளர்ச்சியும் நாகரீகமும் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் இன்னமும் பல இடங்களில் மூடநம்பிக்கைகள் வேரூன்றி இருக்கின்றன. ஆண்குழந்தை  என்றால் வரவு. பெண்குழந்தை என்றால் செலவு என்ற கருத்து இன்னமும் தமிழகத்தின் பல கிராமங்களில் மாறவும் இல்லை. மறையவும் இல்லை. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி நத்தமேடு பகுதியில் வசித்து வருபவர்  30 வயது பிரபு. இவரது மனைவி 21 வயது சகுந்தலா தேவி  .

கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!
இவர்களுக்கு 3½ வயதில்  ஏற்கனவே மகாஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சகுந்தலா தேவிக்கு ஏப்ரல் 18ம் தேதி 2வது பெண்குழந்தை பிறந்தது.  குழந்தை பிறந்த 9வது நாளில் அதாவது ஏப்ரல் 27ம் தேதி  சகுந்தலா தேவி குழந்தையை  தூங்க வைத்து விட்டு வெளியே வந்தார். பின்னர் வீட்டு வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்குள் சென்ற போது குழந்தை உயிரிழந்து விட்டதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு   அனுப்பி வைத்தனர்.

சிறை
 பிரேத பரிசோதனை  முடிவுகளின் படி குழந்தையின் தலையில் உள்பக்கம் காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  ஒருவேளை குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என காவல் துறையினருக்கு  சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் குழந்தையின் தாய் சகுந்தலா தேவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.  

சிறிது நேரம் கழித்து ஏற்கனவே ஒரு பெண் குழந்தையிருக்க  மீண்டும் இரண்டாவதாகவும் மற்றொரு  பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையின் தலையை அமுக்கி கொலை செய்ததை ஒத்து கொண்டார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்   காவல் துறையினர் சகுந்தலாதேவியை கைது செய்து  சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே குழந்தையை நீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web