பகீர்... மாயமான இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம்!

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து காணாமல் போன இளைஞர்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலூர் எம்.புதூர் மற்றும் டி.புதூர் கிராமங்கள் அமைந்துள்ளன எம்.புதூர் பகுதியில் வசித்து வரும் சரண்ராஜ் என்பவரும் டி.புதூர் பகுதியை சேர்ந்த அற்புதராஜ் என்பவரும் காணவில்லை என ஜனவரி மாத இறுதியில் அற்புதராஜ் பெற்றோர்களும், பிப்ரவரி 1ம் தேதி சரண்ராஜ் பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் கடந்த 20 நாட்களாக துப்பு கிடைக்காத நிலையில் அவர்களது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நண்பர்கள் 5 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதில் 2 பேரை கொன்று புதைத்திருப்பது தெரியவந்தது.
நெய்வேலி அருகே உள்ள என்.எல்.சி சுரங்கம் உமங்கலம் என்ற பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் தற்போது இருவரின் உடலும் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. 5 பேரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக உடல்கள் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!