அதிர்ச்சி... அக்கா, தங்கையைக் கடத்தி கற்பழித்த 8 பேர் கொண்ட கும்பல்!

 
சகோதரிகள்

உத்தரபிரதேச மாநிலம் உசேன்கஞ்ச் மாவட்டம் பாதேப்பூர் கிராமத்தை சேர்ந்த 16, 15 வயதுடைய சகோதரிகள் இருவர் பக்கத்து ஊரில் நடைபெற்ற திருவிழாவை பார்க்க சென்றனர். திருவிழாவை பார்த்து விட்டு இரவோடு இரவாக வீடு திரும்பினர்.

வழியில் அவர்களை வழிமறைத் 8 பேர் கொண்ட கும்பல் தகராறு செய்தது. பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சகோதரிகளை மிரட்டி அந்த கும்பல் கடத்தி சென்றனர். மறைவான இடத்துக்கு 2 பேரையும் தூக்கி சென்ற அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

சகோதரிகள்

அப்போது சிறுமிகள் இருவரின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். கிராம மக்களை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனாலும் பொதுமக்கள் அவர்களில் 6 பேரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.  கைதான 6 பேரும் 22 வயதில் இருந்து 26 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. தலைமறைவான அவர்களது நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

சகோதரிகள்

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சகோதரிகள் இருவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் வழக்கில் சிக்கிய கும்பல் சம்பவம் நடப்பதற்கு முன்பு திருவிழா பார்க்க சென்ற சகோதரிகளிடம் அத்து மீறியதும், அவர்களிடம் இருந்து செல்போனை பறித்ததும் தெரிய வந்தது. அதன் பிறகு தான் அவர்கள் பின் தொடர்ந்து சென்று இந்த கொடூரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web