பகீர் வீடியோ... சிறுமியை கொம்பினால் தூக்கி எறிந்த மாடு... !

 
மாடு

மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதும் , போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்ல அந்த வழியாக செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பெரும் இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் விபரீதங்களில் கொண்டு முடிந்துவிடுகிறது. அப்படி  ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்து பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச  மாநிலம், நொய்டாவில்  தாத்ரியில்  ஆசிரியர் காலனியில் சிறுமிகள் இரண்டு பேர் இணைந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.   சாலையோரம் வந்து கொண்டிருந்த காளைமாடு ஒன்று அதில் ஒரு சிறுமியை  கொம்பினால்  முட்டித் தூக்கி எறிந்தது.  இதனால் அந்த சிறுமி தலைக்குப்புற கீழே விழுந்தார்.  அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமி மிகச்சிறு  காயங்களுடன்  உயிர் தப்பினார். இந்த வீடியோ  தற்போது சமூக வலைதளங்களில் பெரும்   வைரலாகி வருகிறது.

ஆம்புலன்ஸ்


இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாட்டின் உரிமையாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது . இச்சம்பவம் குறித்து   தாத்ரி வார்டு கவுன்சிலர் ஹரிஷ் ராவல்  "தெருவில் திரியும் அனைத்து கால்நடைகளும்  பசுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என  நகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாட்டின் உரிமையாளர்கள் பொது இடங்களில் மாடுகளை விடுவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற விபரீதங்கள் நிகழா வண்ணம் நகராட்சிக்கு அவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என     தெரிவித்துள்ளார்.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web