திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கிய பேருந்து... ஒரு பக்தர் பலி!

 
பேருந்து

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் சிலர் பேருந்தில்  புறப்பட்டு சென்றுள்ளனர்.  திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி விட்டு, அயோத்திக்கு சென்றனர். பின்பு ஊருக்கு திரும்பினர்.

இந்நிலையில், பிரோசாபாத் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து அதிகாலை 4 மணிக்கு  திடீரென தீப்பிடித்து கொண்டது. இதனை பார்த்ததும் பேருந்தில்  இருந்த பயணிகள் அலறியடித்தபடி வெளியே தப்பி ஓடியுள்ளனர்.  புனித நீராடலில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய பக்தர்களில் ஒருவர் பேருந்துக்குள்  ஆழ்ந்த நிலையில் தூங்கி கொண்டு இருந்தார்.  

பேருந்து

அவரை யாரும் கவனிக்கவில்லை என தெரிகிறது. பேருந்து தீப்பிடித்து முற்றிலும் எரிந்ததில் சிக்கி அவர் பலியாகியுள்ளார்.  அவர், ராஜஸ்தானின் நகாவர் பகுதியை சேர்ந்த 33 வயது பவன் சர்மா  என தெரிய வந்துள்ளது. மற்ற அனைவரும் வேறொரு பேருந்தில்  சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?