டேங்கர் லாரி மீது மோதியதில் தீப்பிடித்த எரிந்து பேருந்து... 14 பேர் உடல் கருகி பலி!

 
டேங்கர் லாரி

நைஜீரியா நாட்டில் நைஜர் மாகாணத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் குசோபோகி என்ற இடத்திற்கு அருகே சென்றது. அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை முந்தி செல்ல பேருந்து முயற்சித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென அருகே வந்த ஒரு டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.  

நைஜீரியா

இதில் பேருந்து மற்றும் லாரி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்த நிலையில் பேருந்தில் இருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 

நைஜீரியா

இந்த விபத்தில் ஆறு பேருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் இந்த விபத்து குறித்து  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web