திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து !! உடல் கருகி நடத்துனர் பலி!!

 
நடத்துனர்

தொலைதூர பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுனர் , நடத்துனர்கள் நிறுத்தும்  இடத்திலேயே பேருந்திற்குள்ளேயே தூங்கி விட்டு மீண்டும் அன்றைய இரவே அந்த பேருந்தை இயக்க தொடங்குவர் . அதே போல் ஒரு பேருந்தில் தூங்கி கொண்டிருந்த நடத்துனர் தீவிபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூரில் லிங்கதீரனஹள்ளி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

தீ விபத்து

அதில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த நடத்துனர் உயிரிழந்துள்ளார். ஓட்டுனர் பிரகாஷ் பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் சுமனஹள்ளி பஸ் டிப்போவுக்கு சொந்தமான பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஓய்வறையில் தூங்கச் சென்று விட்டார். ஆனால் நடத்துனர் மட்டும்  பேருந்திலேயே தூங்கி கொள்வதாக தெரிவித்தார். அப்போது திடீரென பேருந்தில் தீப்பற்றிக் கொண்டது.  இந்த தீ விபத்தில் பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த நடத்துனர் தீயில் கருகி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ்

இந்த விபத்து குறித்து  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதில் உயிரிழந்த நடத்துனர் 45 வயது  முத்தையா சுவாமி . இவருக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web