50 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்!! 3 இளைஞர்கள் படுகாயம்!!

 
50 அடி

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  28 வயது   ஜெகதீசன் மகன் ராஜ்குமார்.   இவர் அதே பகுதியில் தனியார் குடிநீர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடன் பணிபுரியும் பழனிசாமி மகன்  21 வயது விக்னேசுடன் , ஆத்தூர் 26 வயது அருள்மணி மூவரும் காரில் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தனர்.  

விபத்து

இதில் ராஜ்குமார் காரை  ஓட்டி வந்துள்ளார். ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு  போதையில் சேர்வராயன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.  மீண்டும் தாங்கள் தங்கிய விடுதி அறைக்கு திரும்பிய போது மலைப்பாதையில் எதிரே சரக்கு வாகனம் ஒன்று வந்ததை கவனிக்க தவறி விட்டனர்.  இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார்  50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த விக்னேஷ் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆம்புலன்ஸ்

ராஜ்குமார், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு   விரைந்து வந்த காவல்துறையினர்  விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்