பள்ளத்தில் பாய்ந்த கார்!! 2 சிறுமிகள் பலி!! துக்கவீட்டிற்கு சென்று திரும்பிய போது சோகம்!!

 
ஆம்புலன்ஸ்

சமீபமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அதிவேகம், அடுத்தடுத்த பயணங்கள் , போக்குவரத்து நெரிசல் , மன அழுத்தம் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ஓட்டுனரின் அலட்சியமே பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாகி வருகிறது. அந்த வகையில் துக்கவீட்டிற்கு சென்று வரும் போது ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கவனிக்காமல் சாலையோர பள்ளத்தில் காரை விட்டார். இதனால் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்தனர். 

பள்ளத்தில் கார்
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர்  முகமது சலீம். இவர் கறிக்கடை நடத்தி வருகிறார் . . இவரது உறவினர் ஆந்திராவில் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. உடனே  துக்கத்தில் கலந்து கொள்ள உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார். ஆந்திராவில்  அனந்தபூர் பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்வில் கலந்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது  சிப்காட் அருகே பெல் சாலையில் வந்துகொண்டிருந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் ஓட்டுநர் தூக்க கலகத்தில் இருந்ததே கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கு  காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்று காலை சென்னை நோக்கி காரில் வந்தனர். அதில் 6 பேர் இருந்தனர்.

ஆம்புலன்ஸ்

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த   32 வயது  விஜய் காரை ஓட்டி வந்தார். இந்த விபத்தில் காரில் பெரியவர்களுடன் பயணம் செய்த 17 வயது சுமையா பாத்திமா, 15 வயது தபாசம் பாத்திமா இரு சிறுமிகளும்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் காரில் பயணித்த மற்ற 4 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்விற்கு சென்று வரும் போது  கார் பள்ளத்தில் கவிழ்ந்து இரு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web