கிணற்றுக்குள் பாய்ந்த கார்.. அலறிய தாய், மகள்.. கிராம மக்கள் போராட்டம் !!

 
ஹேமலதா

கோவை மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் ஹேமலதா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தாய், மகள் இருவரும் தங்கள் வீட்டில் இருந்து கார் மூலம் ஈரோடு நோக்கி சென்றுள்ளனர்.

அங்கு சொந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் குறுக்கு அதிவேகமாக சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த 30 அடி ஆழ விவசாய கிணற்றுக்குள் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கிணற்றில் சிறதளவு தண்ணீர் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஹேமலதா

மேலும் தாயும், மகளும் காரில் இருந்து அலறினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹேமலதா மற்றும் திவ்யதர்ஷினியை மீட்டு மேலே கொண்டுவந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஹேமலதா

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் எந்திரம் மூலம் காரை மீட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 
 

From around the web