அசுர வேகத்தில் ஆட்டோ மீது மோதிய சொகுசுக் கார்!! ஆட்டோ ஓட்டுநர் பலி!!

 
ராஜா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முதல் நெல்லை, அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி வரை செல்லும் சாலையின் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி காரணமாக சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டும், சாலைகள் பெயர்க்கப்பட்டும் காணப்படுகிறது.இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றது. அண்மையில், சாலை பணியை விரைந்து முடிக்கும்படி அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தலைமையில் போராட்டம் கூட நடைபெற்றது. எனினும் சாலைபணி முடிந்தபாடில்லை. 

ராஜா

இந்த நிலையில், அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூர் பகுதியில் இந்த பைபாஸ் சாலை ஆட்டோ ஓட்டுனர் ராஜா தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ ஓட்டுனர் ராஜா மீது மோதியது.

இந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரம், கட்டுப்பாட்டை இழந்த கார் ராஜாவை இடித்து விட்டு அருகில் சாலை ஓரம் நின்ற மரம் மீது மோதி நின்றது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் கார் ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

ராஜா

அதில் அந்த ஆட்டோ மீது அதி வேகத்தில் கார் மோதும் காட்சிகள் காண்போரை பதபதைக்கச் செய்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.   

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web