இன்று முதல் அமலுக்கு வர உள்ள மாற்றங்கள்... UPI முதல் EPFO வரை என்னென்ன மாற்றங்கள்!

 
யுபிஐ
இன்று மார்ச் மாதம் தொடங்கிய நிலையில், இன்று முதல் யுபிஐ முதல் பிஎஃப் வரை பல முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த முக்கியமான மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்க. 

1.UPI : 
இன்று மார்ச் 1-ம் தேதி முதல் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸில் (UPI) பரிவர்த்தனைகள் தொடர்பான ஒரு பெரிய மாற்றம் இருக்கும். அ இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) புதிய விதிகளின்படி, பயனர்கள் யுபிஐ மூலம் காப்பீட்டு பிரீமியத்தைச் செலுத்துவது இனி எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

UPI
 

2.பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO): 

சமீபத்தில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு  அதன்படி உலகளாவிய கணக்கு எண்ணை  செயல்படுத்துவதற்கும் வங்கி கணக்குகளை ஆதார் உடன் இணைப்பதற்கும் காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது EPFO அமைப்பு.  அதுவும் முன்பு யுனிவர்சல் கணக்கு  எண் மற்றும் வங்கி கணக்குகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடு 2025 பிப்ரவரி 15- தேதி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த காலக்கெடுவை மீண்டும் நீட்டித்து மார்ச் 15ம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது 

3.சிலிண்டர்  : 

EPFO
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் சிலிண்டர் விலையை கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப மாற்றியமைத்து வருகின்றன. எனவே இன்று மார்ச் 1-ம் தேதியன்று சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படலாம்.  

4. ரயில் பயணம்: மார்ச் மாதத்தில் ரயில் பயணம் செய்ய திட்டமிடுவதற்கு முன்பு நீங்கள் செல்லும் வழித்தடத்தில் குறிப்பிட்ட நாட்களில் ரயில்கள் இயங்குமா அல்லது ரயில் வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு கிளம்பலாம். இந்திய ரயில்வே விதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web