10வது நாளாக தொடரும் குளறுபடி... இன்று 36 இண்டிகோ விமானங்கள் ரத்து!

 
இண்டிகோ

இந்தியா முழுவதும் கடந்த பத்து நாட்களாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்றும் (டிசம்பர் 11, வியாழக்கிழமை) 10-வது நாளாக மொத்தம் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இண்டிகோ

இன்று மொத்தம் 36 விமானங்கள் (24 புறப்பாடு, 12 வருகை) ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று (டிசம்பர் 10) மட்டும் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய மற்றும் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் என மொத்தம் 70 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இன்று இதன் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.

இண்டிகோ

சிங்கப்பூர், பாங்காக், குவைத், மும்பை, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிர்வாகம் ரத்துக்கான காரணத்தை 'நிர்வாக காரணங்கள்' என்று அறிவித்தாலும், பயணிகள் முன்பதிவு ரத்து போன்ற பல்வேறு காரணங்களால் விமான சேவைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் தொடர்ந்து சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!