சரிந்து விழுந்த விசிக மேடை... 2 எம்எல்ஏக்கள் படுகாயம்!
May 3, 2025, 06:40 IST

கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா கூட்டம் மே 6ம் தேதி சிதம்பரம் புறவழிச்சாலை அருகே நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிடவும் ஆய்வு செய்யவும் நேற்று வி.சி. கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்பியுமான ரவிக்குமார், மேடை அமைக்கும் பணிகளை திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ பாலாஜி, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு மற்றும் நிர்வாகிகளுடன் மேடை மீது ஏறினர்.
இதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக படிக்கட்டில் ஏறி ரவிக்குமார் எம்பி, உள்ளூர் நிர்வாகிகள் மேடைக்கு சென்றனர். அவர்களுக்கு பின்னால் எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் சென்றனர்.
அப்போது மேடையின் மேல் நெருங்குவதற்கு முன், கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென மேடைக்கு செல்லும் படிக்கட்டு சரிந்து விழுந்தது. இதில் எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் 3 பேர் உட்பட 5 பேர் கீழே விழுந்தனர். இதில் 2 எம்எல்ஏகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?
From
around the
web