மாடியில் இருந்த குதித்த கல்லூரி மாணவி மரணம்.. உறவினர்கள் மறியல்!

 
கார்த்திகா ஜோதி கார்த்திகா ஜோதி

திண்டுக்கல் பழையபட்டியைச் சேர்ந்தவர் கன்னியப்பன் என்பவர் மகள் கார்த்திகா ஜோதி (19), ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.சி., நர்சிங் முதலாமாண்டு படித்தார். அவருடன் 3 மாணவிகள் தங்கினர். கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 9 மணிக்கு கல்லுாரியின் 3ஆவது மாடியிலிருந்து குதித்து கார்த்திகாஜோதி தற்கொலைக்கு முயன்றார்.

இதில் படுகாயமடைந்த கார்த்திகாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால், மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  

கார்த்திகா ஜோதி

மாணவி தற்கொலைச் செய்து கொள்ளும் எண்ணத்தில் மாடியில் இருந்து கீழே குதித்தாரா? அல்லது தவறுதலாக கீழே விழுந்தாரா? வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி கார்த்திகா ஜோதி உயிரிழந்தார். அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கார்த்திகா ஜோதி

இதையறிந்த மாணவி உறவினர்கள்  திரண்டு போராட்டம் நடத்தினர். தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?