எம் எல்சி பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்!

 
எம்.எல்.சி
 

மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பிரக்ஞா சதவ் ராஜிநாமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் 2030 வரை இருந்த நிலையில், திடீரென அவர் விலகியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை காலை சட்ட மேலவை தலைவர் ராம் ஷிண்டேவை சந்தித்த பின்னர், தனது ராஜிநாமா கடிதத்தை சட்டமன்றச் செயலகத்தில் அவர் சமர்ப்பித்தார்.

மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சதவின் மனைவியான பிரக்ஞா சதவ், ராகுல் காந்தியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக அறியப்படுகிறார். உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ள சூழலில் அவரது இந்த முடிவு, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கட்சிக்குள் இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரக்ஞா சதவ் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அடுத்த அரசியல் முடிவு குறித்து அனைத்து தரப்பினரும் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!