நாடே எதிர்பார்ப்பு... பிரபல நடிகை பலாத்காரம் வழக்கு... நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!

 
பாவனா திலீப்

பிரபல தமிழ், மலையாள நடிகை அந்த செய்தியை வெளியிட்ட போது நாடே பதைபதைத்தது. மலையாளத் திரையுலகையே உலுக்கிய நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்களாக ஒவ்வொருவராக நூல் பிடித்தாற்போல் சிக்கிக் கொண்டிருந்த நிலையில், பிரபல மலையாள திரைப்பட நடிகர் திலீப் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று வழங்க இருக்கிறது.

கேரள திரையுலகின் மீது கறைபடிந்த இந்த வழக்கு, அம்மா சங்கத்தின் பொறுப்பாளர்கள் உட்பட பலர்  நடிகைகளுக்கும், துணை நடிகைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்தது. இந்த வழக்கில் மலையாள திரையுலக நடிகைகள் அனைவரும் பாதிக்கப்பட்ட நடிகைக்கு துணையாக நின்றனர். சுமார் ஆறரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த 2017ம் ஆண்டு கொச்சி நகரில் நடந்தது. அப்போது முன்னணி நடிகை ஒருவர் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஒரு கும்பல் அவரை வழிமறித்து, காருக்குள்ளேயே அவருக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில், எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

திலீப்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெரும்பாவூரைச் சேர்ந்த பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் தலைமையிலான சிலர் தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. சுனிலைக் கைது செய்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் முடிவில் தான், இந்தப் பாலியல் துன்புறுத்தலின் பின்னணியில் ஒரு பெரிய சதித் திட்டம் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்தச் சம்பவத்திற்குக் காரணமே, பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை ஆகியோருக்கு இடையே நிலவி வந்த முன்விரோதம் தான் என்றும், நடிகர் திலீப் சதித் திட்டம் தீட்டியதன் பேரிலேயே இந்தக் கொடூரச் செயல் அரங்கேறியது என்றும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி நடிகர் திலீப்பை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட மொத்தம் 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

திலீப்

இந்த வழக்கு விசாரணை 2018ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நடிகர் திலீப் கடந்த 2018ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் முக்கியச் சாட்சிகளிடம் சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு டிசம்பர் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வழக்கில் அளிக்கப்பட உள்ள தீர்ப்பு, மலையாளத் திரையுலகினரிடையே மட்டுமல்லாமல் பொதுமக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!