கதறும் காதலன்... பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி... சிவமதி மரணத்தில் குழப்பம்!
திருநெல்வேலியில், தனது காதலியை பெற்றோரும், தாய்மாமனும் சேர்ந்து ஆணவக்கொலை செய்திருக்கிறார்கள் என்று காதலன் புகாரளித்திருந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், காதலி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை பேட்டை செக்கடியைச் சேர்ந்தவர் பச்சிராஜன். அரசு பஸ் டிரைவரான இவரது மனைவி ரேவதி, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் இளையமகள் சிவமதி (18) பாளை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சிவமதி, பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணனுடன் காதலித்து வந்தார். ஆனந்த கிருஷ்ணன் ஏர்டெல் நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றுகிறார்.

இருவரும் வெவ்வேறு பிரிவினரினால், சிவமதியின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவினர் மகனுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதையொட்டி, ஆனந்த கிருஷ்ணனும் சிவமதியும் வரும் 6-ஆம் தேதி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

கடந்த சில தினங்களில் சிவமதியின் உடல்நிலை சரியில்லை எனக் கூறி, மாலை 6 மணியளவில் அவரை டவுன் கண்டியபேரி அரசு மருத்துவமனையில் கழுத்தில் காயத்துடன் பெற்றோர் சேர்த்தனர். மருத்துவர்கள் சிவமதியைப் பரிசோதித்து விட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று அறிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தனது காதலியை ஆணவக்கொலை செய்து விட்டார்கள் என்று சிவமதியின் காதலன் புகாரளித்திருந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், சிவமதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
