"கப்பு முக்கியம் பிகிலு!" - இந்திய கிரிக்கெட் அணிக்கு மகளிர் உலக சாம்பியன்கள் வாழ்த்து!

 
ஸ்மிருதி மந்தனா

2025-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய மகளிர் அணியினர், தற்போது டி20 உலகக் கோப்பையைத் தற்காத்துக் கொள்ளக் களமிறங்கும் இந்திய ஆடவர் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிசிசிஐ  தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், மகளிர் அணியின் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்:

ஹர்மன்பிரீத் கவூர் (கேப்டன்) "மனதார விளையாடுங்கள், மகிழ்ந்து விளையாடுங்கள். நீங்கள் நிச்சயம் கோப்பையை வெல்வீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இந்திய அணிக்கு எங்களது வாழ்த்துகள்" என்று நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசியுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்): "இந்திய அணி மிகவும் வலுவாகக் காணப்படுகிறது. மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை வெல்ல நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். அழுத்தம் இல்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தீப்தி சர்மா: 2025 மகளிர் உலகக் கோப்பையின் 'தொடர் நாயகி' விருது வென்ற தீப்தி சர்மா, "இந்த முறை உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் இது மிகவும் சிறப்பானது. கோப்பையை வீட்டிற்குக் கொண்டு வாருங்கள்" என்று உற்சாகப்படுத்தியுள்ளார்.

ரிச்சா கோஷ்: விக்கெட் கீப்பர் பேட்டரான ரிச்சா கோஷும் இந்திய ஆடவர் அணிக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முன்பெல்லாம் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஆடவர் கிரிக்கெட் நட்சத்திரங்கள் விளம்பர தூதர்களாக இருந்தனர். ஆனால், தற்போது மகளிர் அணியினர் உலக சாம்பியன்களாகத் திகழ்வதால், ஆடவர் உலகக் கோப்பைக்கான விளம்பரங்களில் அவர்களே முன்னிலை வகிக்கின்றனர்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா போன்ற வீராங்கனைகள் ஆடவர் அணி ஜெர்சியை அணிந்து, "இந்த கோப்பை இங்கேயேதான் இருக்கும்" என்று கூறும் விளம்பரங்கள் வைரலாகி வருகின்றன. வரும் பிப்ரவரி 7, 2026 முதல் போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து இத்தொடரை நடத்துகின்றன.

2024ல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி, தற்போது தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும். உலக சாம்பியன்களாகத் திகழும் மகளிர் அணியின் இந்த வாழ்த்துகள், இந்திய ஆடவர் அணிக்குக் கூடுதல் உத்வேகத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!