மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த நடன ஆசிரியர்.. புத்தகத் திருவிழாவில் சோகம்!

 
சிவகங்கை


கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது மற்றும் திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.நடனம் ஆடிய போதே மயங்கி விழுந்து மரணம் உடற்பயிற்சி செய்யும் போது மரணம் , நடந்து சென்ற போது மரணம் என பள்ளி கல்லூரி மாணவ, மாணவர்கள் கூட உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில்   மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நடன ஆசிரியர், மேடையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


சிவகங்கை மன்னர் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த புத்தக திருவிழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டம் அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த நடன ஆசிரியர் ராஜேஷ்கண்ணன், நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். அப்போது பார்வையாளர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

சிவகங்கை


அந்த உற்சாகம் சிறிது நேரம் கூட  நீடிக்கவில்லை. 53 வயதான ராஜேஷ் கண்ணன் நடனமாடிவிட்டு மேடையில் இருந்து இறங்க முயன்ற போது, திடீரென மேடையில்யேயே மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பதறி துடித்தபடி அவரை காப்பாற்ற ஓடினர். 
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் புத்தக திருவிழாவில் பெரும்  சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?