உசுருக்கு ஆபத்து... கழுத்தில் மாலையோடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!

 
காதல் காதலர்கள் தஞ்சம்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த காதலர்கள், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதி நாகை மகளிர் காவல் நிலையத்தை நாடியது, நாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை இஞ்சிக்கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவரும், செம்மங்குடி பகுதியைச் சேர்ந்த ஜனனி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவீட்டுப் பெற்றோர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

காதல் காதலர்கள் தஞ்சம்

பெற்றோர்கள் தங்களைப் பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நாகப்பட்டினத்திற்கு வந்துள்ளனர். அங்கு இன்று முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணச் செய்தி அறிந்த ஜனனியின் தந்தை மற்றும் உறவினர்கள் கடும் கோபமடைந்து, அவர்களைத் தேடத் தொடங்கியுள்ளனர். உறவினர்கள் தங்களை வலைவீசித் தேடுவதை அறிந்த காதல் ஜோடி, உயிருக்கு பயந்து நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றனர்.

காதல் ஜோடி

"எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்குப் பெண்ணின் உறவினர்களே பொறுப்பு" என்று கூறி தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறையினரிடம் மனு அளித்தனர். காவல் நிலைய வாசலிலேயே இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு தங்கள் திருமணத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

காதல் ஜோடியின் மனுவைப் பெற்றுக் கொண்ட போலீசார், இருவீட்டுப் பெற்றோர்களையும் அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இருவரும் மேஜர் என்பதால், அவர்களுக்குரிய சட்டப்பூர்வப் பாதுகாப்பை வழங்கவும் காவல்துறை உறுதி அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!