புயல் ஆபத்து நீங்கியது... ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கிறது!
கடந்த சில நாட்களாகத் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுத் தமிழகக் கடற்கரையை நோக்கி வரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் அது புயலாக மாற வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுவதற்கான சாதகமான சூழல் தற்போது இல்லை. எனவே, புயல் குறித்த முந்தைய எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது. இந்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இது புயலாக மாறாவிட்டாலும், பலத்த காற்றையும் மழையையும் தரக்கூடும்.

புயல் அபாயம் நீங்கினாலும், இதன் தாக்கம் காரணமாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வரும் ஜனவரி 11 மற்றும் 12-ம் தேதிகளில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் வாய்ப்பு குறைந்தாலும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இப்போதும் நீடிக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜனவரி 14 பொங்கல் அன்று பெரிய அளவில் மழை பாதிப்பு இருக்காது என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தற்போதைய செயற்கைக்கோள் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
