கதறித் துடித்த மகள்... மணப்பெண்ணின் தாய் விபத்தில் பலி... சொல்லாமல் திருமணத்தை நடத்திய உறவினர்கள்!

 
 கதறித் துடித்த மகள்... மணப்பெண்ணின் தாய் விபத்தில் பலி... சொல்லாமல் திருமணத்தை நடத்திய உறவினர்கள்! 
 

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு அருகே வெட்டிக்காடு அய்யனார்புரம் பகுதியில் வசித்து வருபவர்  ரங்கசாமி. இவருக்கு வயது 55. இவரது மனைவி மாலதி. இவர்களின் மகள்  சுசித்ராவுக்கு சதீஷ்குமார் என்பவருடன் நேற்று ஊரணிபுரத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.  

திருமணம்

திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வீட்டிற்கு பொருட்களை எடுத்து வருவதற்காக ரெங்கசாமி- - மாலதி தம்பதி சென்றிருந்தனர். வீட்டில் இருந்து, பொருட்களை எடுத்து, டூ - வீலரில் ஏற்றி திருமண மண்டபத்திற்கு சென்று கொண்டிருந்தபோது  கலியராயன் விடுதி பிரிவு சாலையில்  ரங்கசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால், நிலை தடுமாறி, சாலையோர பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தார். 

5வது திருமணம்

டூ - வீலரில் இருந்து துாக்கி வீசப்பட்ட மாலதி, தடுப்பு சுவரில் தலை மோதி  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து கணவர் கண்முன்னே பலியானார்.  தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார், மாலதி உடலை மீட்டு, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ரங்கசாமி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, சுசித்ராவுக்கு தகவல் தெரிவிக்காமல், திருமணத்தை நடத்திய உறவினர்கள், தாய் உயிரிழந்த செய்தியை பிறகு தெரிவித்தனர். இந்த தகவலை கேட்டதும் மாலதி கதறி துடித்த சம்பவம் காண்பவர் கண்களில் நீரை வரவழைத்தது.மகளின் திருமண நாளில் தாய் உயிரிழப்பு, தந்தை சீரியசாக இருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web