கதறிய மகள்.. பொங்கல் சீர் கொடுத்த தந்தை விபத்தில் உயிரிழப்பு... பார்க்கச் சென்ற உறவினரும் பலியான சோகம்!

 
விபத்து

தனது மகளுக்கு ஆசை ஆசையாக பொங்கல் சீர் கொடுக்க சென்றிருந்த தந்தை, பொங்கல் சீர் கொடுத்துவிட்டு, வீட்டிற்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து பார்க்க சென்றவரும் விபத்தில் பலியான சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி மற்றும் காட்டுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் ஆகிய இருவரும் இன்று இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் வசிக்கும் சன்னியாசியின் மகளுக்குப் பொங்கல் சீர்வரிசைப் பொருட்கள் வழங்குவதற்காக அவர்கள் சென்றனர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு கார் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சன்னியாசி மற்றும் ராமலிங்கம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தந்தை விபத்தில் சிக்கிய செய்தி கேட்டு, சன்னியாசியின் மகள் வேம்பரசி மற்றும் உறவினர்கள் அரியநாச்சியிலிருந்து ஒரு ஆட்டோவில் வேப்பூர் நோக்கி விரைந்தனர்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

முதல் விபத்து நடந்த இடத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலேயே, இவர்கள் வந்த ஆட்டோ மீது மற்றொரு கார் மோதியது. இதில் ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த வசந்தா என்ற பெண் உயிரிழந்தார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!