காதலனுடன் சென்ற மகள்.. மகளிடம் அன்பாக பேசி தந்தை செய்த வெறித்தனமான காரியம்!

 
காதலன் ஆணவக்கொலை கெளரவக்கொலை கொலை காதல்

குடும்பக் கௌரவம் என்ற பெயரில் ஒரு இளம் பெண்ணின் உயிர் அவரது தந்தையாலேயே பறிக்கப்பட்டிருப்பது மத்தியபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம், போபால் பிண்டு மாவட்டத்தைச் சேர்ந்த நித்து (21) என்பவருக்கும், ஒரு இளைஞருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால், நித்து ஏற்கனவே தனது உறவுக்கார இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்குப் பின்னரும் காதலைத் தொடர்ந்த நித்து, கடந்த சில நாட்களுக்கு முன் கணவரைப் பிரிந்து காதலனுடன் குவாலியர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அங்கு இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டு வேறொரு கிராமத்தில் வசித்து வந்தனர். தனது மகள் செய்த காரியத்தால் ஆத்திரமடைந்த தந்தை முனீஷ் தனுக், தனது மகளைச் சமாதானப்படுத்தித் தனது ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

கிராமத்திற்கு வந்ததும், மகளிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கூறி முனீஷ் அவரைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் நித்துவைச் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த நித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த பிண்டு மாவட்ட போலீஸார், நித்துவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மகளைக் கொலை செய்த தந்தை முனீஷை போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர். "கணவனை விட்டுவிட்டு காதலனுடன் சென்றதால் ஆத்திரத்தில் கொலை செய்தேன்" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!