கல்யாணமான அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு பிரசவ வலி... மணமகன் வீட்டார் அதிர்ச்சி!

எப்பூடிடா... என்று திருமணத்திற்கு வாழ்த்த வந்திருந்த சொந்த பந்தங்களும், நண்பர்களும் வாட்ஸ்-அப் குழுக்களில் குசலம் விசாரித்து சிரித்து வைக்கிறார்கள்.
ஊர் முழுக்க பத்திரிக்கை வைத்து, திருமணம் நடத்திய நிலையில், கல்யாணம் முடிந்த அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்து, பிரசவத்தில் குழந்தைப் பிறந்த சம்பவம் மணமகன் வீட்டாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருமணமான அடுத்த நாளே தங்களது மருமகள் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தால் மணமகன் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெற்றோர்கள் கூடி நடத்தி வைத்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஆண்டே மணமகனுக்கும் மணமகளுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒரு வருடமாக பழகிவந்த நிலையில் கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாளே இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் முடிந்த மறுநாளே பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால் அது எப்படி என விசாரிக்க கடைசியில் தான் நடந்த உண்மை நிலவரம் தெரிய வந்தது.
பெற்றோர்கள் இருவரும் 2024 மே மாதம் திருமணத்தை முடிவு செய்தனர். அதன் பிறகு இருவரும் பழக ஆரம்பித்திருந்த நிலையில் திருமணம் முடிவானதால் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளனர். அதன் விளைவாகவே குழந்தை பிறந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பெண் வீட்டார் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த குழந்தைக்கு காரணம் மாப்பிள்ளை தான் என்றாலும் அவர்களின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் ஏற்க மறுக்கின்றனர். இருப்பினும் அந்தப் பெண் பத்து மாதங்களாக எப்படி தான் கர்ப்பமாக இருந்ததை மறைத்தார் என்பது அங்கிருப்பவர்களின் கேள்வியாக இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!