மரண ஓலம்... கதறும் மக்கள்... தாய்லாந்து, மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... 150க்கும் அதிகமானோர் உயிரிழப்பு... குவியும் உலக நாடுகள் ஆதரவு!

 
நிலநடுக்கம் மியான்மர்

தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 150க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மீட்பு பணிகளிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெறுங்கைகளால் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மியான்மர் நாட்டின் சாகைங் நகரின் வடமேற்கு பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் 11.50 மணிக்கு ஏற்பட்டது.  அதிலிருந்து மீள்வதற்குள் அடுத்த சில நிமிடங்களில் அதே பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.


மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்திலும் எதிரொலித்து. வானுயர கட்டிடங்கள் கொண்ட தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் அதிக சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளன. பாங்காங்கில் கட்டப்பட்டு வந்த 30 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இந்த கட்டிடத்தில் 43 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாகவும், இதுவரை 3 தொழிலாளர்கள் உயிரிழந்தது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தாய்லாந்து துணைப் பிரதமர் ஃபும்தம் வெச்சாயாசாய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

மியான்மரின் தலைநகர் நேபிடாவில் உள்ள 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே காயமடைந்த பலர் வரிசையாக சிகிச்சை பெற காத்திருக்கின்றனர்.

நிலநடுக்கம்

இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உள்கட்டமைப்பு சேதம் மற்றும் உடனடி மனிதாபிமானத் தேவைகள் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம் என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இதயத்தை உடைக்கும் காட்சிகளாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 27 நாடுகளின் கூட்டமைப்பு உதவத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். இந்தியா, 15 டன் நிவாரணப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web