பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் காலமானார்… திரையுலகில் சோகம்!

 
புன்னப்ரா

1970-களில் மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். நீண்ட திரை பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்தியவர்.

இந்த நிலையில், 77 வயதான புன்னப்ரா அப்பச்சன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல நடிகர்கள், இயக்குநர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் தங்களின் அனுதாபங்களை பதிவு செய்துள்ளனர். பல தலைமுறைகளின் நினைவில் நிலைத்திருக்கும் நடிகராக புன்னப்ரா அப்பச்சன் நினைவுகூரப்படுகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!