வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது... கனமழை அலெர்ட்!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், கடந்த திங்கள்கிழமை மாலை இந்த தாழ்வு பகுதி உருவானது. பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதன்கிழமை காலை தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனவரி 9-ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
