திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.. எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? வைலராலும் லிஸ்ட்!

 
திமுக தொகுதி பங்கீடு பேசுவார்த்தை

டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழு, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்த ஆலோசனைகளை இன்று முதல் மேற்கொண்டு வருகிறது. இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அக்கட்சி 5 தொகுதிகளைக் கோர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

நாளை பிப்ரவரி 23ம் தேதி மதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளைக் கோரத் திட்டமிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 26ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPIM) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையிலான குழு இதில் பங்கேற்கிறது. பிப்ரவரி 27ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPI) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

சிபிஎம் திமுக

இந்த முறை திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் புதிதாக இணைந்துள்ளன. உத்தேசமாக திமுக 167 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு உத்தேசமாக  காங்கிரஸ்: 28 தொகுதிகள், தேமுதிக: 6 தொகுதிகள், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக: தலா 6 தொகுதிகள், ஐயுஎம்எல்: 3 தொகுதிகள், ஓபிஎஸ் அணி: 2 தொகுதிகள், மமக: 2 தொகுதிகள், கொமதேக, தவாக: தலா 1 தொகுதி என தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஸ்டாலின் கமல்

இருப்பினும், பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் கடந்த முறையை விட அதிகத் தொகுதிகளைக் (இரட்டை இலக்க எண்ணிக்கையில்) கோருவதால், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் திமுகவுக்குக் கடும் சவால் காத்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் காங்கிரஸ், விசிக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தேதியை திமுக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!