"திமுகவுக்கு தோல்வி பயம்... தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பெண்கள் ஞாபகம் வரும்" - குஷ்பு அதிரடி!

 
குஷ்பு

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் குஷ்பு செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசியுள்ளார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் அரசியல் காரணங்களுக்காக வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுவது தவறானது. இந்த விருதுகள் தகுதியின் அடிப்படையிலும், இதுவரை அங்கீகரிக்கப்படாத உண்மையான சாதனையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகளுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதால், மத்திய அரசின் ஒவ்வொரு நல்ல திட்டத்தையும் அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என்றார். 

சுந்தர்.சி உடல்நிலை குறித்து மனம் திறக்கிறார் குஷ்பு !

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், 2026 தேர்தலில் பாஜகவின் பலம் நிரூபிக்கப்படும் என்றவர், 2026 தேர்தலுக்கான கூட்டணி குறித்துக் கேட்டபோது, அது குறித்துக் கட்சித் தலைமை சரியான நேரத்தில் முடிவெடுக்கும் எனவும், தற்போது கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில், மத்திய அரசு எடுத்து வரும் ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மீனவர்கள் பாதுகாப்பில் பாஜக சமரசம் செய்யாது என உறுதி அளித்தார்.

குஷ்பு

2026-27 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் நிதி உதவிகள் குறித்துப் பேசிய அவர், இதனைத் தமிழக அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருக்கும் குஷ்பூ, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்தார். இது குறித்து மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பாஜக செய்யும் என்றும் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!