தப்பியோடிய ஓட்டுநர்... சென்னையில் அரசுப் பேருந்து மோதி டூ வீலரில் சென்ற பெண் உட்பட 3 பேர் காயம்!

 
விபத்து

சென்னை கோடம்பாக்கத்தில் இன்று மதியம் அரசுப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்தத் துயரமான விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்: இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண் உட்பட மொத்தம் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் மற்றும் போலீஸார், அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன், பொதுமக்களின் கோபத்திற்குப் பயந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.

விபத்து

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பேருந்து ஓட்டுநரின் விவரங்களை வைத்துப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெரிசல் மிகுந்த கோடம்பாக்கம் பகுதியில் இந்த விபத்து நடந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!