மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை.. 3 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, நுங்கம்பாக்கம் கெத்துறல் கார்டன் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஊழியரான ராமச்சந்திராவிடம் சிறப்பு காவல் படையினர் விசாரணை நடத்தினர்.
இதில், பெங்களூரில் இருந்து கிரைண்டர் செயலி மூலம் போதைப்பொருட்களை வாங்கி தனது நண்பர்கள் கார்த்திக் ராஜா மற்றும் முகமது ஜெக்பர் சாதிக் ஆகியோருக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு காவல் படையினர் மூவரையும் கைது செய்து, எட்டு கிராம் மெத்தம்பேட்டமைன், மூன்று செல்போன்கள் மற்றும் 24 சிரிஞ்ச்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!