பள்ளிகளில் சத்து மாத்திரை வழங்க புதிய கட்டுப்பாடுகள்!! தமிழக அரசு அதிரடி!!

 
மாத்திரை மருந்து

நீலகிரி மாவட்டம் உதகையில், மாணவி ஒருவர் அதிக எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் மாநிலம் பெரும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் கைக்கு ஒரே நேரத்தில் 60, 70 மாத்திரைகள் சாப்பிடும் அளவுக்கு கிடைத்தது எப்படி என்றும் பலரும் விமர்சனம் முன்வைத்தனர். 

இந்நிலையில், பள்ளி மாணவா்களுக்கு வாரத்துக்கு ஒரு சத்து மாத்திரை மட்டுமே வழங்க வேண்டும் உள்ளிட்ட புதிய விதிகளை பொது சுகாதாரத் துறை பிறப்பித்துள்ளது.பள்ளிக் கல்வித் துறை ஆணையா், மாவட்ட துணை சுகாதார இயக்குநா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்விவநாயகம் வழங்கியுள்ளார். அதில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு 400 மில்லி கிராம் திறன் கொண்ட மாத்திரைகளும், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு 500 மில்லி கிராம் அளவிலான சத்து மாத்திரைகளும் வழங்க வேண்டும்.

ஊட்டச்சத்து

இதற்காக பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அலுவலா் அல்லது ஆசிரியரை பிரத்யேகமாக நியமித்தல் வேண்டும். வாரத்துக்கு ஒரு மாத்திரை மட்டுமே வழங்க வேண்டும். அதுவும் ஒருங்கிணைப்பு அலுவலா் அல்லது ஆசிரியா் முன்னிலையில் உட்கொள்ளச் செய்வது அவசியம்.

சம்பந்தப்பட்ட நாளில் பள்ளிக்கு வராத மாணவா்களுக்கு அதற்கு அடுத்த நாளில் சத்து மாத்திரைகளை வழங்க வேண்டும். மாறாக அடுத்த வாரத்தில் கூடுதல் தவணையாக அதிக மாத்திரைகள் வழங்கக் கூடாது. அதேபோன்று மாத்திரைகள் உட்கொள்வதற்கு முன்பு மாணவா்கள் ஆரோக்கியமான மதிய உணவை எடுத்துக் கொண்டனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

காய்ச்சல், மயக்கம், வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள மாணவா்களுக்கு மாத்திரைகள் வழங்கத் தேவையில்லை. சத்து மாத்திரைகள் வழங்கிய விவரங்களையும், விடுபட்ட மாணவா்களின் விவரங்களையும் மாவட்ட வாரியாக சேகரித்து வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் பொது சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைத்தல் கட்டாயம், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து

தமிழகத்தில் உள்ள 58,339 அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் 78 லட்சம் மாணவா்களுக்கு இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் சத்து மாத்திரைகள் வாரத்துக்கு ஒன்று வீதம் 52 வாரங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web