சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்... 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

 
பலாத்கார முதியவர்

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்து உள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.ஓவுலாபுரம், பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காளிமுத்து (70). இவா், கடந்த 2021 ஆம் ஆண்டு கடையில் மிட்டாய் வாங்கி விட்டு வீடு திரும்பிய 6 வயது சிறுமியை முதியவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

அப்போது கடைக்குச் சென்ற சிறுமியை காணவில்லை என சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் தேடிய போது முதியவர் காளிமுத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்ற விவரம் தெரியவே அங்கு நேரடியாக சென்று பார்த்த போது சிறுமி அழுது கொண்டிருந்த நிலையில் முதியவர் தப்பிச் சென்றுள்ளார்.

Rape

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதியவர் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவு பெற்று சாட்சியங்களின் அடிப்படையில் முதியவர் காளிமுத்து குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

POsco

குற்றவாளிக்கு போக்சோ சட்டம் 6ன் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 20 ஆயிரம் ரூபாய் அபராதம், அதைக் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து போச்சோ சிறப்பு நீதி மன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து குற்றவாளியை சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web