தேர்தல் திருவிழா ஆரம்பம்... பிப்.14ல் அமித் ஷா தமிழகம் வருகிறார்!

 
அமித் ஷா இபிஎஸ்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி நெருங்கும் நிலையில் வரும் பிப்ரவரி 14ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேலத்தில் நடைபெறும் பாஜக மையக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் மாநில மற்றும் மையக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வார். அதே நாளில் மாலை பொதுக்கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்கிறார்.

அமித் ஷா

அதன் பின்னர் காரைக்கால் நகரத்திலும் அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். நிகழ்ச்சி விவரங்கள் இறுதி செய்யப்படாத நிலையில், அடுத்த சில நாட்களில் அவரின் பங்கேற்பு தொடர்பான முழு விவரம் வெளியாகும் என்று புதுவை மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் எம். அருள்முருகன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி அமித் ஷா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் மதிப்பிடப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!