உஷார்... என்னையா பகைச்சுக்கற... முதலாளிகளைப் பழிவாங்கிய ஊழியர்.. லட்சக்கணக்கில் மதிப்பிலான கார்கள் நாசம்! பகீர் வீடியோ!

 
ஆசிட்

பார்க்கிங்கில் நின்ற கார்களை ஆசிட் ஊற்றி நாசம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டார் 75 பகுதியில் அப்பார்மெண்டில் கார் கிளினராக ராம்ராஜ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அந்த அப்பார்மெண்டில் உள்ள கார்களை நாள்தோறும் தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்வது தான் இவரது வேலை. ஆனால் அந்த அப்பார்ட்மென்டில் இருந்த சிலருக்கு இவரின் வேலை பிடிக்காததால் இவர் மீது புகார் செய்துள்ளனர். இதனால் சொசைட்டி இவர் மீது நடவடிக்கை எடுத்து இவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. 

திடீரென வேலையை விட்டு நீக்கியதால் ராம்ராஜ் ஆத்திரமடைந்தார். அடுத்த சில நாட்களில் ஆசிட் பாட்டிலை வாங்கி அப்பார்மெண்ட்க்கு வந்த அவர், பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது ஊற்றியுள்ளார். இதனால் கார்கள் எல்லாம் சேதமடைந்துள்ளது. இதைக் கண்ட கார் உரிமையாளர்கள் முதலில் இதை யார் செய்தது எனத் தெரியாமல் திணறியுள்ளனர்.


பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை எடுத்துப் பார்த்த போது இந்த வேலையை செய்தது ராம்ராஜ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராம்ராஜ் கைது செய்யப்பட்டு போலீசார் செய்து விசாரணை நடத்தி செய்தனர்.

தற்போது ராம்ராஜ் மீது ஐபிசி பிரிவு 427ன் படி வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பொதுவாக காரின் பாடிகள் பிளாஸ்டிக் ஃபைபர் மெட்டிரியல் கொண்டு தான் உருவாக்கப்படும். இதனால் இதன் மீது ஆசிட் பட்டால் அதில் பொசுங்கி நாசமாகி விடும்.

ஆசிட்

இதனால் நீங்களும் உங்கள் வாகனங்களின் மீது ஆசிட் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.காரை வாஷ் செய்யும் போதும் ஷாம்பு அல்லது அதற்கான பிரத்தியேக வாஷர் லிக்யூட்களை கொண்டு கழுவுங்கள். வேறு கெமிக்கல் அல்லது சோப்புகள் கலந்தால் அந்த கெமிக்கல் காரின் பாடியையும் அதில் உள்ள பளபளப்பையும் பாதிக்கும். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

     

     

From around the web