சென்னையில் பரபரப்பு... எழும்பூரில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து!

 
ரயில் விபத்து

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே இன்று ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் ஐதராபாத்தில் விபத்துக்குள்ளான நிலையில், இன்று சென்னையில் ரயில் எஞ்சின் தடம்புரிண்டது அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரயில் எஞ்சினை மீட்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எழும்பூரில் தடம் புரண்ட ரயில் எஞ்சின்.

இன்று காலை புதுச்சேரியில் இருந்து பயணிகளுடன் எழும்பூர் ரயில் நிலையம் ஒன்றாவது நடைமேடைக்கு வந்தடைந்தது விரைவு ரயில், நடைமேடையில் நின்றிருநத ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காக சேத்துப்பட்டு பணிமனையில் இருந்து ரயில் எஞ்சின் எழும்பூர் ரயில் நிலையம் நோக்கிச் சென்றது.

அந்த ரயில் இன்ஜின், எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை அருகே வரும் போது திடீரென தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. பின்னர் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் எஞ்ஜினை மீட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால், ரயில் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web