திருப்பூர் பனியன் குடோனில் பயங்கர தீ விபத்து..!

 
வீரபாகு

திருப்பூர் மாவட்டம் காங்கயம்பாளையம் புதூர் பகுதியில், வீரபாகு (55) என்பவர் கழிவு பனியன் குடோன் வைத்துள்ளார். வாடகைக்கு எடுத்து தகர ஷீட் அமைத்து குடோன் அமைத்திருந்தார். இதில் இருந்து பனியல் வியாபாரம் செய்துவந்தார். 

இந்நிலையில், நேற்று அதிகாலை 3.15 மணியளவில் குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

வீரபாகு

பழைய துணிகளில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. குடோனுக்குள் நிறுத்தி வைத்திருந்த 2 சரக்கு ஆட்டோக்கள், ஒரு பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். அங்குவந்த வீரபாகு குடோன் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

வீரபாகு

இந்த குடோனுக்கு மின்சார இணைப்பு இல்லை. இதனால் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த குடோனுக்கு பின்புறம் குப்பைகள் அதிகம் உள்ளது. அந்த குப்பையில் தீப்பற்றி குடோனுக்குள் பரவியிருக்கலாம் என்று தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் நாசமானதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web