பரபரப்பு... கள்ளநோட்டு அச்சடித்த விசிக பிரமுகர்... !

 
கிழிந்த நோட்டு
 


தமிழகத்தில் கடலூர் மாவட்டம் ராமநத்தம்  கிராமத்தில் வசித்து வருபவர்  பரமசிவம் மகன் செல்வம் .இவர் விசிக கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வருகிறார் .  

rupee 500

இவர் தனக்கு சொந்தமான விளைநிலப் பகுதியில் கொட்டகை அமைத்து அதில் லேப்டாப் பிரிண்டர் வைத்து கள்ளநோட்டு அச்சடிப்பதாக ராமநத்தம் காவலருக்கு  தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து நேற்று  மார்ச் 31ம் தேதி  காலை ராமநத்தம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார், விளைநிலப் பகுதிக்கு சென்றனர்.போலீஸார் வருவதை கண்டதும், கொட்டகையில் இருந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.  

அங்கிருந்த கொட்டகையில் போலீசார்  சோதனையில் ஈடுபட்ட போது, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 83000 மற்றும் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், லேப்டாப், பிரிண்டர் மிஷின்,ஏர் கண், ஏர் பிஸ்டல் , வாக்கிடாக்கி மற்றும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படும் பேப்பர் பண்டல்கள் இவைகளை  போலீஸார் கண்டெடுத்தனர். பின்னர் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து  தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

போலீஸ்


இதனிடையே, செல்வம் என்பவரின் செயலை அறிந்த விசிக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணி, கட்சி பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?